பார்த்திபன் இயக்கி நடித்த “இரவின் நிழல்” படத்தின் மொத்த வசூல் இவ்வளவா.? அடேங்கப்பா..

0
iravin-nizhal
iravin-nizhal

இந்த 2022 ஆம் ஆண்டு திரை பிரபலங்கள் பலருக்கும் நல்ல ஆண்டாக அமைந்துள்ளது விஜயின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, பொன்னியின் செல்வன், விக்ரம், லவ் டுடே போன்ற பல படங்கள் இந்தாண்டில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒரு படமாக மாறி உள்ளது.

இந்த வரிசையில் இடம் பிடித்துள்ள ஒரு படம்தான் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல். இந்த படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பு கண்டது. அதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் முதல் முறையாக எடுக்கப்பட்ட நான் லினியர் சிங்கிள் ஷார்ட் படம் எனவும் கூறப்பட்டது.

இந்த தகவல் உண்மையா என்பது தெரியவில்லை மேலும் இது குறித்து பல சர்ச்சைகளும் எழுந்தது ஆனால் இரவில் படத்தின் இயக்குனர் பார்த்திபனோ இது நான் லினியர் சிங்கிள் ஷார்ட் படம் தான் என அடித்து கூறியுள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் கதாநாயகனாக நடித்துள்ளார்

அவருடன் இணைந்து பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர், பிரியங்கா ரூத், ரோபோ சங்கர் போன்ற பலரும் சிறப்பாக நடித்திருந்தனர். இந்த படத்தில் சில காட்சிகள் சர்ச்சையாக பேசப்பட்டது அதை எல்லாம் ஒரு வழியாக சமாளித்து படம் போட்ட பட்ஜெட்டை தாண்டி அதிகளவு வசூலை ஈட்டியது.

இந்தாண்டில் குறுகிய பட்ஜெட்டில் உருவாகி அதிக வசூல் ஈட்டிய படங்களில் இரவின் நிழல் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மொத்தமாக இரவில் நிழல் படம் 15 கோடி வசூல் செய்திருப்பதாக பார்த்திபன் கூறியுள்ளார் ஓடிடியில் இருந்து 10 கோடியும் திரையரங்கில் இருந்து 4.5 கோடிக்கு மேலும் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார் இது இந்த படத்திற்கு மாபெரும் வெற்றி ஆகும்