வலிமை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் அள்ளிய மொத்த தொகை எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த ரிப்போர்ட்.

VALIMAI
VALIMAI

நடிகர் அஜித்குமார் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 60வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடத்தப்பட்டு வருகிறது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர்.

சார்பட்டா பரம்பரை, கேஜிஎப் 2 ஆகிய படங்களில் மிரட்டிய ஜான் கொக்கேன் வில்லனாகவும் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று ரிலீசாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார் இது இப்படியிருக்க இந்த படத்திற்கு முன்பாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை.

திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து யோகி பாபு, கார்த்திகேயா, ஹுமா குரேஷி, குக் வித் கோமாளி புகழ் மற்றும் பல டாப் நட்சத்திர நடிகர் நடிகைகள் நடித்த அசத்தி இருந்தனர் இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் போனிகபூர் தயாரித்திருந்தார். இரண்டு வருடங்களுக்கு மேல் கழித்துதான் அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலக அளவில் வெளியானது.

படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பியது. வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பாளர் கூறியிருந்தார் இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 105 கோடி வசூல் செய்ததாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மற்ற மொழியை சேர்க்காமல் தமிழகத்தில் மட்டுமே 105 கோடி சேர்ந்தது மிகப்பெரிய ஒரு வசூல் சாதனையாக பார்க்கப்படுகிறது ஊட்டி ஓடிடி தொலைக்காட்சிகளிலும் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.