நடிகர் சிம்பு தவறவிட்ட முக்கிய ஐந்து படங்கள்.? ரசிகர்களுக்கு இப்பவும் அந்த படங்கள் ஃபேவரைட் தானாம்.!

SIMBU
SIMBU

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக தன்னை தக்கவைத்துக் கொண்டவர். தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு, கொரோனா குமாரு, பத்துல தல போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு அவரது ரசிகர்களுக்கு பல ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் சிம்பு நடித்த பல படங்கள் தோல்வியைத் தழுவின. மேலும் சிம்பு பல ஹிட் படங்களை தவறவிட்டு உள்ளார். அப்படி சிம்பு தவறவிட்ட 5 திரைப்படங்களை பார்ப்போம். விஷால் நடிப்பில் வெளிவந்த திமிரு திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து ரீமா சென், ஸ்ரேயா ரெட்டி மற்றும் வடிவேலு போன்ற பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் சிம்புவை தான் கேட்டு உள்ளனர் ஆனால் அந்த நேரத்தில் சிம்புவால் திமிரு படத்தில் நடிக்க முடியாமல் போனதால் விஷால் நடித்து ஹிட்டடித்தது. அடுத்து கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படத்தில் ஜீவாவிற்கு பதில் சிம்பு தான் முதலில் நடிக்க இருந்தார் ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் சிம்பு நடிக்க முடியாமல் போனதால் ஜீவா நடித்து உள்ளார்.

விஜய், ஜீவா ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் ஜீவா நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் இயக்குனர் ஷங்கர் சிம்புவை தான் கேட்டுள்ளார் ஆனால் சிம்புவால் அந்த சமயத்தில் நடிக்க முடியாமல் போனதால் பின்பு ஜீவா நடித்து இருந்தார். இதையடுத்து வேட்டை திரைப்படத்தின் கதையை முதலில் லிங்குசாமி சிம்புவிற்கு தான் முழுக்கதையையும் கூறியுள்ளார்.

ஆனால் அப்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக சிம்பு அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அடுத்து தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை படத்தில் முதலில் சிம்பு தான் நடிக்க இருந்தார் சில காரணங்களால் சிம்புவால் நடிக்க முடியாமல் போக இந்த படத்தில் தனுஷ் நடித்து செம ஹிட்டானது.