AK 61 படத்தின் தலைப்பு வல்லமை கிடையாது.? இதுதான் – V செண்டிமென்டை தூக்கி எறிந்த அஜித்.

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் இவர் தனது ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த படங்களும் வெற்றி படங்களாக மாறுகின்றன இப்பொழுது கூட நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து படம் உருவாகிறது. இந்த படத்திற்காக அவர் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிப்பதாக சொல்லப்படுகிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார் இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, அஜய், யோகி பாபு, மகாநதி சங்கர்.

மற்றும் ஜான் கொக்கேன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்ததாக இறுதி கட்ட படப்பிடிப்பை எடுக்க படக்குழு பாங்காங் செல்ல இருக்கிறது. இதற்கு இடையில் நடிகர் அஜித்குமார் லடாக் பயணம் மேற்கொண்டார்.

அதன் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகின ஒரு வழியாக தற்போது சென்னை வந்துள்ளார். வெகு விரைவிலேயே ஏகே 61 படத்தின் ஷூட்டிங் பாங்காங்கில் நடக்கும் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் AK 61 படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஏகே 61 படத்தின் தலைப்பு துணிவே துணை என இருக்க அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது இந்த செய்தியை தற்பொழுது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Leave a Comment

Exit mobile version