கமல் தொகுத்து வழங்கும் “பிக் பாஸ் 5” சீசன் ஒளிபரப்பபடும் நேரம் மாற்றம்.? எத்தனை மணிக்கும் போட போறாங்க தெரியுமா.?

விஜய் டிவி தொலைக்காட்சி புதிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் மிகப்பெரிய ஒரு ரியாலிடி ஷோவாக தற்போது தன் கையில் வைத்திருப்பது தான் பிக் பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக சீரும் சிறப்புமாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு வேற லெவலில்  ஆரம்பத்திலேயே எகிறியது. அதை தக்க வைத்துக் கொள்ள தற்போது 5வது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார் இதற்காக பலகோடி காசு கொடுத்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 யில் பிரியங்கா, மீலா, ஈமான் அண்ணாச்சி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனால் பிக் பாஸ் வீட்டில் மிகப்பெரிய ஒரு அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருப்பதால் தற்பொழுது ப்ரோமோ வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அக்டோபர் 3ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது.

ஆனால் ஏற்கனவே இருந்த நேரத்திலிருந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதன்படி இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10 மணியிலிருந்து 11 மணி வரை ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

கமல் வரும் சனி ஞாயிறு மட்டும் இரவு ஒன்பது முப்பது மணியிலிருந்து 11 மணி வரை ஒளிபரப்பாகும் என தெரியவந்துள்ளது. நீங்க எதனவென மாத்துங்க பிக் பாஸ் நிகழ்ச்சியை மட்டும் சிக்கரம் போட்டால் போதும் என கூறிவருகின்றனர் ரசிகர்கள்.

Leave a Comment