அதிகம் சொத்து சேர்த்து வைத்திருக்கும் “மூன்று கிரிக்கெட் வீரர்கள்”.. விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய இந்திய வீரர்

0
virat
virat

தொழிலதிபர்கள் சினிமா நடிகர்களை விட அதிகம் சொத்து சேர்த்து வைத்து உள்ளவர்கள் கிரிக்கெட் வீரர்கள் தான். அந்த வகையில் கிரிக்கெட்டின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் 3 வீரர்களை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. கிரிக்கெட்டின் மூலம் அதிக வருமானம் பெறும் வீரர்களில் முதலிடத்தை பிடித்து உள்ளவர்.

சச்சின் டெண்டுல்கர் இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1400 கோடி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது கிரிக்கெட்டில் இருந்து விலகி பல வருடங்கள் ஆன நிலையிலும் இன்னமும் இவருக்கு பணமழை பொழிந்து கொண்டு தான் இருக்கிறது காரணம் நிறைய விளம்பர படங்கள் நடிக்கிறார் மேலும் சச்சின் தனிப்பட்ட முறையில் நிறைய நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இரண்டாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் தற்போதைய கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான எம் எஸ் தோனி தான்.. இவர் அதிக விளம்பர படங்களில் நடிக்கிறார் மேலும் ஆடை துறை, பீர் நிறுவனம், ட்ரோன்கள், சினிமா படம் தயாரிப்பது என ஏகபோகத்திற்கு முதலீடு செய்து உள்ளார்.

இதனால் அவருடைய சொத்து மதிப்பு சுமார் 1000 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.  மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளவர் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி தான். தொடர்ந்து ரன் மழை பொழிந்து வரும் இவருக்கு கிரிக்கெட்டில் நல்ல காசு வருவதோடு மட்டுமல்லாமல் பல விளம்பரங்கள் நடிப்பதால் இவருக்கு காசு குவிந்து கொண்டே இருக்கிறது .

இதுவரை இவருடைய சொத்து மதிப்பு மட்டும் 920 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்து பல வெளிநாட்டு வீரர்கள் இருக்கின்றனர்.  இந்த வரிசையில் எட்டாவது இடத்தை விவ்வேந்தர் சேவாக் பிடித்துள்ளார் இவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட சுமார் 300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

sachin
sachin