பகலில் படப்பிடிப்பு.. அர்த்த ராத்திரியில் அர்ஜுனுக்காக குஷ்பு செய்த விஷயம்.? ரகசியத்தை உடைத்த பயில்வான்..

kushboo : நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் குஷ்பூ முன்னணி நடிகர்களான  ரஜினி, சரத்குமார், பிரபு, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். அதிலும் குஷ்பு நடித்த ரிக்ஷா மாமா, சின்னதம்பி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை நாட்டாமை, ஆகிய  திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.

இவர் தமிழ் திரைப்படங்களை தாண்டி கன்னடம், மலையாளம் ஆகிய பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் பின்பு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். இன்னும் குஷ்பூ குணச்சித்திர வேடத்திலும் நடித்த வருகிறார் அது மட்டும் இல்லாமல் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

நடிகை குஷ்பூ அர்ஜுன் அவர்களுடன் இணைந்து பிரேமகனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு குஷ்புவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது  ஆனால் அர்ஜுனுக்கு அப்படி கிடையாது அர்ஜுன் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது இதனால் அர்ஜுனுக்கு பட வாய்ப்பு குறைந்தது எந்த இயக்குனரும் அர்ஜுனுக்கு படத்தை இயக்க முன்வரவில்லை.

அதன் விளைவாக அர்ஜுன் தன்னுடைய திரைப்படத்தை  தானே இயக்கலாம் என முடிவு செய்து தயாரிப்பாளர்களை அணுகினார் ஆனால் அர்ஜுனுக்கு எந்த ஒரு தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க முன்வரவில்லை ஆனால் ஒரே ஒரு தயாரிப்பாளர் மட்டும் குஷ்புவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அவரை இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வையுங்கள் நான் படத்தை தயாரிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனை குஷ்புவிடம் எப்படி பேசுவது என அர்ஜுன் தயக்கத்தில் இருந்திருக்கிறார் ஆனால் வேறு வழி இல்லாமல் தயக்கத்துடன் குஷ்புவிடம் கால்ஷீட் கேட்டுள்ளார் அர்ஜுன் அந்த சமயத்தில் குஷ்பூ மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் கால் சீட் கொடுக்க முடியாத அளவிற்கு மிகவும் பிசியாக இருந்துள்ளார் ஆனால் அர்ஜுனுக்காக அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார்.

குஷ்பூ பகல் நேரங்களில் மற்ற திரைப்படங்களிலும் நடித்துவிட்டு இரவு நேரத்தில் ஓய்வு கூட எடுக்காமல் அர்ஜுன் திரைப்படத்தில் நடித்துக் கொடுத்தார் இதை பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்