துணிவு திரைப்படத்தில் இந்த காட்சி வரும் போது தியேட்டரே அதிருமாம்.. வெளிவந்த மாஸ் தகவல்

நடிகர் அஜித்குமார் அண்மைகாலமாக ஆக்சன் திரைப்படங்களை தேர்வு செய்து வருகிறார் அந்த வகையில் வலிமை படத்தை தொடர்ந்து  அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு இந்த திரைப்படமும் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர்.

இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, அஜய், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் பிரபலம் சிபி, அமீர் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது தமிழகத்தில் இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவி நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

வெளிநாடுகளில் லைகா நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்வதால் அதிகப்படியான திரையரங்குகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படக்குழு சந்தோஷமாக தனது வேலைகளில் மும்பரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. துணிவு திரைப்படத்திலிருந்து அடுத்ததாக சில்லா சில்லா முதல் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர், ட்ரைலர் போன்ற அப்டேட்டுகளை கொடுக்க இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படம் குறித்து ஒரு சூப்பரான தகவல்கள் வெளி வருகின்றன அதாவது இந்த திரைப்படம் ஆக்சன் திரைப்படம் என்பது ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள நிலையில் ஜான் கொக்கின் துணிவு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் இவரும், அஜித்தும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் மிகப்பெரிய ரீச்சைப் பெரும் எனவும் ரசிகர்கள் சீட் நுனிக்கு வருவார்கள்.

எனவும் கூறியுள்ளனர் மொத்தத்தில் துணிவு திரைப்படம் தியேட்டரையே அதிர விடும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் மத்தியில் இருந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தில் ஜான் கொக்கன் தனது சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கிறார் என கூறப்படுகிறது.

Leave a Comment