விஜய் படத்தால் வெற்றிமாறானுக்கு வந்த சோதனை..! ஒரேடியாக நெருக்கடி கொடுக்கும் தயாரிப்பாளர்கள்..!

0

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது தமிழ் சினிமாவில் என்னதான் பல  மாடலான கதை அம்சமுள்ள திரைப்படங்கள் வெளி வந்திருந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் இன்னும் கிராம கதையம்சம் உள்ள திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள்.

அந்தவகையில் லோக்கல் கதை அம்சமுள்ள திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்து வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். அந்தவகையில் இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவ்வாறு ஆரம்பத்தில் வெற்றி இயக்குனராக இருந்த நமது வெற்றிமாறன் தற்போது முன்னணி இயக்குனராக வளர்ந்து விட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் சூரி வைத்து விடுதலை என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறாராம். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு கான்ஸ்டபிள் தன் வாழ்க்கையில் என்னென்ன தியாகங்களும் சோதனைகளையும் சந்திக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை முடிந்த பிறகு சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விடுதலை திரைப்படத்தை மூன்று மாதத்தில் முடித்து விடுவேன் என கூரியிருந்த வெற்றிமாறன் இன்னும் திரைப்படம் படப்பிடிப்பில் தான் இருக்கிறது.

அதேபோல வாடிவாசல் திரைப்படத்தை ஒரு மாதத்தில் முடித்து விடுவேன் என வெற்றிமாறன் கூறியிருந்தார். ஆனால் இத்திரைப்படத்தின் செட் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டதைப் பார்த்தால் எப்படியும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கூட ஆகலாம் என இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்பெல்லாம் வெற்றிமாறன் வருடத்திற்கு ஒரு திரைப்படம் தான் இயக்கி வந்தார் ஆனால் தற்போது இரண்டு திரைப்படங்களை இயக்குவதாக நேரத்தை இழிபரி செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தளபதி விஜயை வைத்து திரைப்படம் இயக்கப்போவதாக சில பேச்சுவார்த்தை அடிபட்டு வருகிறது.

இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் வெற்றிமாறனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் இதன் விளைவாக தற்போது இந்த இரண்டு திரைப்படத்தை முடித்ததன் பிறகுதான் விஜய் திரைப்படத்தில் கை வைக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம்.

vetrimaran-1
vetrimaran-1