வாரிசுக்கு வந்த சோதனை… வெளியானது நெகட்டிவ் விமர்சனம்.! கடுப்பில் விஜய் ரசிகர்கள்.. யார் பார்த்த வேலைடா இது..

தளபதி விஜய் பிஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு தமன் தான் இசையமைத்துள்ளார். படத்தை தில் ராஜி பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் மூலம் விஜய் முற்றிலும் மாறுபட்ட கூட்டணியுடன் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஒரு பக்கம் வாரிசு திரைப்படம் என்றால் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது அதற்கு காரணம் அடுத்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்க இருக்கிறார். அப்படி இருக்கும் வகையில் வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதாக தகவல் கிடைத்தது.

வழக்கம்போல் விஜய் திரைப்படம் போல் இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட திரைப்படமாக இருக்கும் வித்தியாசமாக இருக்கும் எனவும் பேசப்பட்டு வருகிறது. வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது இதில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. அதிலும் குறிப்பாக எனக்கு போட்டி நான் தான் எனக் கூறியது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது அதுமட்டுமில்லாமல் பாடத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் கோலிவுட்டில் நம்பர் ஒன் ஹீரோ என்றால் அது விஜய் தான் எனக் கூறினார் அது அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது இப்படி வாரிசு திரைப்படத்தால் அடுத்தடுத்த சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்பொழுது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.

எனதான் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்று வந்தாலும் ஒரு சில ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.  இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலரை வைத்து ஒரு சில விமச்சகர்கள்  படத்தின் வெற்றியைப் பற்றி கணித்து உள்ளார்கள் அதாவது வாரிசு திரைப்படத்தில் உள்ள சென்டிமென்ட் காட்சிகள் மக்களிடம் ஒர்க்கவுட் ஆனால் படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் ஒருவேளை சென்டிமென்ட் காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை என்றால் படம் படுதோல்வியை பெரும் எனவும் கூறியுள்ளார்கள் இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

Exit mobile version