பத்து தல திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் டீசர் வெளியீடு குறித்து தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பி காத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது சினிமாவில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் குழந்தை நச்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் சில ஆண்டுகளாக உடல் எடை அதிகரித்த காரணத்தினால் அவருடைய மார்கெட் இழந்து இருந்தது.

அதன் பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்து சிறிது மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு சிறந்த கம்பேக் கொடுத்த திரைப்படம் தான் மாநாடு. இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு அவர்கள் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.

இதனை அடுத்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் நடிகர் சிம்புவின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் சிம்பு உடன் இணைந்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்களை இசையமைத்து உள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் பத்து தல பாடத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரின் நிறுவனம் பத்து தல திரைப்படம் குறித்து ஒரு அப்டேட் வெளியாகும் என அறிவித்திருந்தது.

அந்த வகையில் நாளை வெளியாகும் பத்து தல திரைப்படத்தின் அப்டேட் என்ன என்பது குறித்து தற்போது படக்குழுவினர் அந்த அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார் இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். அதாவது நாளை மாலை 5.31 மணிக்கு பத்து தல படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதோ அந்த அறிவிப்பு…

Leave a Comment