அஜித்திற்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குனரை கூட விடாமல் தட்டி தூக்கிய தளபதி 67 படக்குழு.! பங்கம் செய்யப் போகும் லோகேஷ் கனகராஜ்

கடந்த பொங்கல் தினத்தில் விஜயின் வாரிசு திரைப்படம் மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகியது இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் கடும் போட்டி நிலவி வந்தது இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களும் திரையில் ஒரே நாளில் வெளியானது. அப்படி இருக்கும் வகையில் வாரிசு திரைப்படம் குடும்ப பங்கான திரைப்படமாக வெளியானதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இந்த நிலையில் உடனே தளபதி விஜய் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தில் வெறித்தனமாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரண்டு மடங்காக ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது அதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜ் தான் ஏனென்றால் இவர் இயக்கத்தில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் கமலை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படம் வசூலில் மெகா வேட்டை நடத்தியது.

இப்படி லோகேஷன் யுனிவர்சில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது அதனால் தளபதி 67 திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் ஜானரில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளதால் படம் பக்காவாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது அதுமட்டுமில்லாமல் படத்திலிருந்து அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் நேற்று தளபதி 67 படத்திலிருந்து கிட்டத்தட்ட அப்டேட்டுகளை பட குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் படத்தில் சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மாத்திவ் தாமஸ், மன்சூர் அலிகான், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், பிரியா ஆனந்த், என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளார்கள்.

இந்த நிலையில் மேலும் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தை இயக்கிய கௌதம் வாசுதேவ் மேனன் தளபதி 67 திரைப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பதில் வல்லவர் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரம் தனியாக தெரியும் அந்த அளவு நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர்.

மேலும் தளபதி 67 அப்டேட் இன்று வெளியாக இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment