தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களின் நடித்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் நாளை உலகம் முழுவதும் டிரைவர் ஜமுனா திரைப்படம் வெளியாக இருக்கிறது எனவே தற்பொழுது இந்த பட குழுவினர்கள் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
எனவே இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை கூறி வருகிறார்கள். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஓட்டுநர்களில் ஒரு பெண்ணை தேர்வு செய்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை டிரைவர் ஜமுனா பட குழுவினர்கள் வழங்கியது.
அந்த ஆட்டோவின் சாவியை இந்த படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த ஓட்டுனர் பெண்ணிற்கு வழங்கியுள்ளார். தற்பொழுது 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்பி சவுத்ரி தயாரித்துள்ள திரைப்படம் தான் டிரைவர் ஜமுனா இந்த படத்தின் இயக்குனர் கிங்ஸ்லி இயக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகைக்கு ஆட்டோவை எடுத்து ஓட்டும் பெண்மணியாக நடித்துள்ளார்.

சில நாட்களாக இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிய பட குழுவினர்கள் பங்கு பெற்றனர் நிகழ்ச்சி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பார்ப்பதற்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஆட்டோ ஓட்டும் பொழுது ஏற்பட்ட சுவாரசியமான தகவல்களை ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லாம் பகிர்ந்து கொண்டனர்.

இவ்வாறு பெண்களுக்கு சுய தொழில் என்பது மிகவும் முக்கியமான ஒன்று எனவே பாடுபடும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற 40க்கும் மேற்பட்ட பெண் ஓட்டுநர்களின் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு புதிய ஆட்டோ ஒன்றினை பட குழுவினர்கள் பரிசாக வழங்கியுள்ளனர் இவ்வாறு எதிர்பாராமல் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அந்த பெண் ஓட்டுநருக்கு இவ்வாறு ஆட்டோ பரிசாக கிடைத்தது பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவே அனைவரும் டிரைவர் ஜமுனா திரைப்பட குழுவினர்களை பாராட்டி வருகிறார்கள்.