ஏகே 61 படத்தின் டைட்டிலை ரகசியமாக வைத்திருக்கும் படக்குழு.! ஆனால் நம்ம ரசிகர்கள் சும்மா விடுவார்களா இதுதான் டைட்டில்..

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவரும் ஏராளமான திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது மூன்றாவது முறையாக வினோத் மற்றும் அஜித் ஆகியோர்களின் கூட்டணியில் தற்போது ஏகே 61 திரைப்படம் தயாராகி வருகிறது. இவ்வாறு இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த இரண்டு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்று வந்த நிலையில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் இந்த திரைப்படத்தினை போனி கபூர் தான் தயாரித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வரையிலும் இந்த திரைப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை எனவே ரசிகர்கள் அந்த அப்டேட்டிற்காக மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஏ கே 61 திரைப்படத்தின் டைட்டில் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியாகி உள்ளது.அதாவது பட குழு டைட்டில் எப்படியாவது கசிந்து விடுகிறது அதனால் அஜித் பட டைட்டிலை மிகவும் ரகசியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தின் டைட்டிலை சரியான நேரத்தில் வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது பட குழு தற்பொழுது வல்லமை, ராபரி போன்ற தலைப்புகளை முடிவு செய்து வைத்துள்ளது மேலும் வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி தான் இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது என கூறி வருகிறார்கள். ராபரி என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் வல்லமை என்ற தலைப்பு வைப்பதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது ரசிகர்கள் மிகவும் ஆவலாக இந்த திரைப்படத்தின்  ரிலீஸ்க்காக மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள் மேலும் இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version