ப்ரோமோஷனுக்காக சரியான நேரம் பார்த்து தோனி தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு.!

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது எந்த டீம் ஜெயிக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் பலரும் மிக ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மிகவும் அற்புதமாக விளையாடி வருகிறார் எப்படி ஒரு டீமை அழகாக வெற்றிக்கு கொண்டு வர வேண்டுமோ அதற்கு ஏற்றது போல் பக்காவாக பிளான் போட்டு செயல்பட்டு வருகிறார்.

இந்த ஆண்டோடு செல்லும் தோனி அடுத்ததாக தமிழில் ஒரு சில திரைப்படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் பார்த்தால் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தை தோனி தயாரித்து வருகிறார்.

மேலும் இந்த தகவல் எப்பொழுதே அறிவிக்கப்பட்டிருந்தது ‘Let’s Get Married’ (LGM) என இந்த படத்திற்கு தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்பொழுது LGM திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது இதில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கையில் மோதிரத்துடன் நிற்க அருகில் இவானா மற்றும் நதியா ஆகிய இருவரும் கோபமாக பார்ப்பது போல் தெரிகிறது.

இதனை வைத்துப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைகளம் கொண்ட திரைப்படமாக இருக்கப் போகிறது பார்ப்பதற்கு யோசிக்க வைக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படம் வெளியாகிவிட்டால் பல கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் எந்த மாதிரி கதைகளம் கொண்ட இந்த திரைப்படம் அமையும் என்பது தெரியாது ஆனால் பலரும் இது ஒரு காதல் கதையை மையமாக வைத்து தான் இந்த திரைப்படத்தை எடுத்து வருகிறார்கள் எனவும் ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.

Leave a Comment