ப்ரோமோவுடன் லியோ படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்த பட குழுவினர்.! உச்சகட்ட எதிர்பார்ப்பை எகிறவிட்ட லோகேஷ்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் லியோ என்று பேயரிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து லியோ படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளதாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது அதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படமாக உருவாகும் திரைப்படம் தான் லியோ.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் விஜய் நடிக்கும் லீயோ படத்தின் ரிலீஸ் தேதி 19.10.2023 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளதாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதுவும் இந்த நாள் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் அது மட்டுமல்லாமல் அது விடுமுறை நாட்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் அமோக வரவேற்பு பெற்ற நிலையில் இதனை அடுத்து லியோ படம் தற்போது வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது.

அது மட்டும் இல்லாமல் லியோ படத்தின் பிரமோ வீடியோ இன்று வெளியாகி இருக்கிறது அந்த பிரமோ வீடியோவில் தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து உள்ளனர்.

இதோ அந்த அறிவிப்பு…

leo
leo

Leave a Comment