முரட்டு இயக்குனர் என பெயர் எடுத்த பாலாவை அழவைத்த தமிழ் படம்.! அதுவும் ஒரு பெண் இயக்குனர் படம்.

0

Direcor Bala crying in see in tamil Movie: நம் தமிழ் சினிமாவில் டிஃபரண்டான ஒரு இயக்குனர் என்றால் அது பாலா தான். இவரைப் பற்றி பல நடிகர், நடிகைகள் இவர் ஒரு டெரர் பீஸ் என்று கூறி உள்ளார்கள் என்றால் பாலா நடிப்பு சரியாக வரவில்லை என்றால் அடித்து சொல்லி தருவாராம்.

பொதுவாக இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் வெகு நாட்கள் வரை நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதுமட்டுமல்லாமல் தரமான நல்ல கதை உள்ள படத்தை தான் இவர் இயக்குவார்.

இவர் இயக்கும் படங்கள் பொதுவாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விடும். அதோடு வசூல் வேட்டையும் அடைந்துவிடும். இவ்வாறு இயக்குனராக இவர் திரை வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் சில காலங்களாக எந்த ஒரு படமும் வசூல் வேட்டையை அடையவில்லை.

இதைப் பற்றிகூட நினைத்து கவலைப்பட வில்லையாம். இவரை பொதுவாக அனைவரும் கொடூரமானவர் என்று தான் கூறுவார்கள். இப்படிப்பட்ட இவர் ஒரு திரைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு தேம்பித் தேம்பி அழுது உள்ளாராம் இந்த செய்தி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது அது என்னவென்றால் சுதா கோங்கரா இயக்கத்தில் 2016ஆம் ஆண்டில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடித்திருந்த இறுதிச்சுற்று திரைப்படத்தை பார்த்து தேம்பி தேம்பி பாலா அழுது உள்ளாராம். இதனை அறிந்த இவருடைய ரசிகர்கள் பாலாவையே கண்கலங்க வைத்து விட்டார் சுதா கோங்காரோ உண்மையிலேயே இவர் பெரிய ஆளு தான் என்று கூறி வருகிறார்கள்.