பதினாறு வயதினிலே படத்தில் நடிகை ஸ்ரீதேவியை விட கம்மியாக சம்பளம் வாங்கிய சூப்பர் ஸ்டார்.? அதுவும் எவ்வளவு தெரியுமா.?

ஒரு காலகட்டத்தில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் ஒரு சில திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள் என்பது யாராலும் மறக்க முடியாது அவ்வாறு இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் 16 வயதினிலே இந்த திரைப்படம் வெளியான பொழுது தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டு விட்டது.

என்று தான் கூற வேண்டும் மேலும் இதில் ரஜினிகாந்த் பரட்டை என்ற பெயரில் நடித்து மிகவும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது.இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்,ஸ்ரீதேவி மற்றும் ஒரு சில பிரபலங்கள் நடித்திருப்பார்கள் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு வில்லன் கதாபாத்திரம் போல் நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் கமல் மற்றும் ரஜினி நடிப்பு மிகவும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்த திரைப்படம் வெளியான பொழுது பல நாட்கள் வரை ஓடி வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்தது என்று தான் கூற வேண்டும்.இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த கமல்,ரஜினி,ஸ்ரீதேவி ஆகியவர்கள் வாங்கிய சம்பளம் பற்றி ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது உலக நாயகன் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் நடித்த பொழுது ரூ.27 ஆயிரம் சம்பளம் பெற்றாராம் அதே போல் நடிகை ஸ்ரீதேவிக்கு 9000 சம்பளம் தந்தார்களாம் ஆனால் ரஜினிகாந்திற்கு 3000 மட்டுமே சம்பளம் கொடுத்தார்களாம் அப்பொழுது காலகட்டத்தில் அனுபவத்தை பார்த்து தான் சம்பளத்தை கொடுப்பார்கள் என்பது தெரிந்த ஒன்றே.

kamal
kamal

நடிகை ஸ்ரீதேவியை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று மடங்கு சம்பளம் கம்மியாக தான் வாங்கியுள்ளார் ஆனால் தற்பொழுது ரஜினி நடிக்கும் பல திரைப்படங்களுக்கு பல கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவர் தனியாக கதாநாயகனாக நடித்து தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment