அந்த விஷயத்தில் நயன்தாராவை பின்பற்றும் “வாரிசு” பட நடிகை.! இருக்கிறது போதாது இது வேறயா.. புலம்பும் ரசிகர்கள்.

0
rashmika-
rashmika-

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழி பக்கம் தொடர்ந்து நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அதில் இவரது நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் முதல் முறையாக இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜயுடன் முதல் முறையாக நடிப்பதால் ரொம்ப சந்தோஷத்தில் ராஷ்மிகா மந்தனா இருப்பதாக தெரியவருகிறது மேலும் விஜயுடன் நடித்த எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளப் போவதாகவும் கூறி உள்ளார்.

வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மறுபக்கம் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா  2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சினிமாவுலகில் தொடர்ந்து வெற்றியை ருசித்து ஓடினாலும் மறுபக்கம் நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சற்று கிளாமரை காட்டி அசத்துகிறார்.

இதனால் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன இப்படி சினிமா மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து அசத்துகிறார் ராஷ்மிகா. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா வேறு ஒரு வழியில் காசு சம்பாதிக்க களமிறங்கி உள்ளார்.

Plum என்ற அழகு சாதன நிறுவனத்தில் அவர் முதலீடு செய்திருக்கிறார் மேலும் அவர் பிராண்ட் அம்பாசிடராகவும் செயல்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா மந்தனா வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. நயன்தாராவைத் தொடர்ந்து இவரும் தற்பொழுது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.