சினிமாவிற்கு வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்பொழுது சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் பிரபல நடிகர் சட்டை ரூபாய் 2 லட்சம், வாட்ச் ரூபாய் 2 கோடி என அவர் அணிந்திருக்கும் சட்டை மற்றும் வாட்சிங் விலை பற்றி தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் அது குறித்த புகைப்படமும் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது தெலுங்கு திரைவுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சிரஞ்சீவி. இவரின் மகனாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது டோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ராம்சரண் இவர் நடிப்பில் இந்த ஆண்டு ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த படத்தினை ராஜமவுலி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ராம் சரண் கடந்த 2012ஆம் ஆண்டு உபாசனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் இந்த தம்பதியினர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை இந்நிலையில் தற்பொழுது தான் ராம் சரணின் மனைவி உபசாரா கர்ப்பமாகி இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ராம்சரண் தன்னுடைய சம்பளத்தை 100யாக கோடியாக உயர்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது அவர் அணிந்திருந்த வாட்ச் மற்றும் சட்டையின் விலை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது அதாவது ராம்சரண் சமீபத்தில் தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது.

அதில் அவர் அணிந்திருக்கும் சட்டையில் போட்டியிடுப்பது போல் வரிக்குதிரை டிசைன் இடம் பெற்றிருந்தது அந்த சட்டையின் விலை கிட்டத்தட்ட ரூபாய் 2 லட்சம் இருக்கும். அதே போல் அவர் அணிந்திருக்கும் வாட்ச்சியின் விலை இரண்டு கோடியாம் அதாவது அவர் Richard Mille என்ற பிராண்ட் வாட்சை அணிந்திருக்கிறாராம் இவ்வாறு இதனைக் கேட்டவுடன் ரசிகர்கள் வாயை பிளந்து பார்க்கிறார்கள்.