வலிமை படத்தின் போஸ்டரால் ரசிகர்களை பகைத்து கொண்ட வாரிசு நடிகர்.! ஆறுதல் சொல்ல ஆள் இல்லாதால் வருத்தத்தில் இருக்கும் பிரபலம்.

0

ஹச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் இதுவரையும் முடிந்த பாடு இல்லை. இருப்பினும் வலிமை படக்குழு ஒன்றை வருடங்களுக்குப் பிறகு படக்குழு படத்தின் அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை வயிற்றில் பாலை வார்த்தது.

ரசிகர்களும் மோஷன் போஸ்டரை வேற லெவலில் கொண்டாடினர் உடனடியாக அடுத்தது ஒரு இன்ப அதிர்ச்சி ரசிகர்ளுக்கு படக்குழு கொடுத்தது அடுத்த சில நிமிடங்களிலேயே பர்ஸ்ட் லுக் போஸ்டரை அள்ளி வீசியது.

வெளிவந்த ஒரு சில நிமிடங்களிலேயே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இந்த படத்தின் போஸ்டர்களில் கண்டு களித்தனர் மேலும் தற்போதும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு சில சினிமா பிரபலங்கள் ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் வலிமை போஸ்டரையும் கொண்டாடினர் இப்படியிருக்க சமீபத்தில் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து வரும் நடிகர் சாந்தனு சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் அஜித்தின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்து விட்டு தல அஜித்தின் தோற்றமும் சிறப்பாக இருக்கிறது எனக் கூறினார் இதை சமூக வலைத்தளத்தில் கண்ட தளபதி ரசிகர்கள் உடனே அவரை விமர்சிக்கத் தொடங்கினார் காரணம் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனுவுக்கு இவ்வாறு ட்வீட் போட்டது. தளபதி ரசிகர் கோபம் ஊட்டியது.

இதை கண்ட சாந்தனு உடனடியாக அந்த பதிவுக்கு மீண்டும் ஒரு ட்வீட் ஒன்றைப் போட்டார்.

அவர் கூறியது டுவிட்டரில் நான் எது பேசினாலும் தவறுகிறது நல்ல விதமாக சொன்னாலும் தவறாக அர்த்தம் செய்து கொள்கின்றனர்.

நான் சொன்னதை திரித்து பேசுகிறார்கள் எனவே எனது முந்தைய ட்வீட்டில் சொன்னதை மீண்டும் வார்த்தைகளாக மாற்றி சொன்னேன் ஒரு நல்ல விஷயம் சொன்னாலும் அதை யோசித்துதான் சொல்ல வேண்டிய சூழல் தற்போது இருக்கிறது.

சமூக ஊடகம் ஒரு ஆபத்தான அரிதாகிவிட்டது எப்படியோ எனக்கு தலயின் தோற்றம் பிடித்திருக்கிறது என ட்வீட் போட்டார்.