புதிய உச்சத்தைத் தொட்ட வலிமை – தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கோடியா.? வியப்பில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவுலகில் அதிகப்படியான ஆண் ரசிகர் பட்டாளத்தை  வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். இதனால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் திரையரங்கில் வெளியாகும் போது அதை ஒரு வாரத்திற்கு திருவிழாவாக கொண்டாடுவது வழக்கமாக வைத்துள்ளனர் ரசிகர்கள்.

அஜித் நேர்கொண்ட பார்வை விசுவாசம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தின் வலிமை திரைப்படம் ஒரு வழியாக பிப்ரவரி 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ரொம்ப வருடம்  காத்திருந்து பார்த்து தற்பொழுது திருவிழா போல கொண்டாடினர்.

படமும் எதிர்பார்த்தது போல வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று அடித்து நொறுக்கி வருகிறது.மேலும் வசூலிலும் குறையாத அளவிற்கு போய்க்கொண்டிருக்கிறது முதல் நாளில் மட்டுமே தமிழகத்தில் மட்டும் வலிமை திரைப்படம் சுமார் 36.17 கோடி வசூலித்த நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் வேட்டையை கண்டு வருகிறது.

இதுவரை உலக அளவில் 130 + கோடி வசூலித்த தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டுமே வலிமை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதுவரை தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி அள்ளி புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்பொழுது குடும்பங்களையும் வெகுவாக வலிமை திரைப்படம் கவர்ந்து இழுத்து உள்ளதால் வலிமை படத்திற்கான வரவேற்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது சொல்ல வேண்டுமென்றால் திரையரங்கில் இன்றும் ஹவுஸ்புல்லாக தான் போய்க் கொண்டிருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் பலர் கூறி வருகின்றனர் இதனால் திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு வசூல் சாதனை படைக்கும் என பலரின் கருத்தாக இருக்கிறது இதன் மூலம் அஜித்தின் கேரியரில் அளவில் உயர்ந்து இருக்கும் என பலரும் கூறுகின்றனர்.

Leave a Comment