தீரன் படத்தின் சண்டைக் காட்சிகளை விட பல மடங்கு அதிகம் சண்டை காட்சிகள் இருக்கும் எனக் கூறிய வலிமை ஸ்டண்ட் மாஸ்டர்.!என்ன கூரியுள்ளார் தெரியுமா.!

வெள்ளித்திரையில் தனது அயராத உழைப்பினால் பல திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பை காட்டி ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் தல அஜித் இவரது நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை இந்த திரைப்படம் முதலில் ஹைதராபாத்தில் நடந்து வந்தது.

அங்கு தல அஜித் விலை உயர்ந்த பைக்கில் ஸ்டண்ட் செய்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்மேலும் இந்த படப்பிடிப்பு இன்னும் ஸ்பெயின் நாட்டில் 10 நாட்கள் மட்டுமே எடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் வலிமை படம் மிகவும் அருமையாக வந்துள்ளது எனவும் தீரன்அதிகாரம்ஒன்று படத்தின் சண்டைக் காட்சிகளை விட மூன்று நான்கு மடங்கு அதிகமாக தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ajith

அதுமட்டுமல்லாமல் வலிமை திரைப்படத்தில் அஜித் கொஞ்சம் கூட டூப் போடாமல் நடித்துள்ளாராம் ரசிகர்கள் எதிர்பார்த்த பைக் காட்சிகளும் இதில் உண்டு எனவும் தெரிவித்துள்ளார் அஜித் வலிமை படத்தில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் டூப் போடாமல் நடித்துள்ளாராம்.

மேலும் இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

Leave a Comment

Exit mobile version