ராஜமௌலியை நம்பி காத்து கிடக்கும் வலிமை படக்குழு.? நல்ல செய்தி சொல்வாரா.. என ஏங்கி கிடக்கும் தல ரசிகர்கள்.

0

பிரமாண்ட படங்களை எடுத்து வெற்றி கொண்டு வரும் ராஜமவுலி தற்போது RRR என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். படம் வெகுவிரைவிலேயே வெளிவர உள்ளது.   தற்போது கொரோனா தலைவிரித்து ஆடுவதால் மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் படங்கள் அனைத்தும் திரையரங்கை எதிர்பார்த்து குறிவைத்து காத்திருக்கின்றன

பிரமாண்ட பட்ஜெட் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் குறைந்த பட்ஜெட் படங்கள் மற்றும் டாப் நடிகர்கள் படங்கள் தற்போது  பீதியில் இருக்கிறது காரணம் திரையரங்குகள் திறக்கப்படும்போது ராஜமௌலியின் RRR படம் வெளியிட்டால் மாற்ற சின்ன படங்கள் மற்றும் டாப் நடிகரின் படங்கள் காணாமல் போய்விடுவது மட்டுமில்லாமல் வசூலிலும் தோற்றுவிடும்.

அதனால் அந்த திரைப்படங்கள் தற்போது ராஜமௌலியின் வார்த்தையை எண்ணியே காத்துக்கிடக்கின்றன அந்த வகையில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்ற நிலை தெரியாமல் முழி பிதுங்கிப் போய் உள்ளது காரணம் தீபாவளியை குறி வைத்து ரஜினியின் அண்ணா திரைப்படம் காத்துக்கிடக்கிறது.

அதனால் அப்பொழுது மோதுவது சரி இருக்காது என படக்குழு திட்டமிட்டது மேலும் அதற்கு முன்பாகவே ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிடலாம் என வலிமை படம் திட்டம் போட்டாலும் ராஜமௌலி திடீரென RRR படத்தை ரிலீஸ் செய்து விட்டால் தமிழ்நாட்டிலும் திரையரங்குகள் கிடைக்காமல் போய்விடும் என்பதால் படக்குழு தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி உள்ளது.

RRR
RRR

மேலும் ராஜமௌலி என்ன சொல்ல போகிறார் என்பதை குறிவைத்து வலிமை படக்குழு மற்றும் மற்ற குறைந்த பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஏக்கத்துடன் காத்துக் கிடக்கின்றனர். மொத்தத்தில் ராஜமௌலி கைப்பிடியில் தான் தொங்கிக் அனைத்து திரைப்படங்களும் நல்ல செய்தி சொல்வாரா..