முதல் நாளில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்த பழைய யுத்தியை கையில் எடுக்கும் வலிமை படக்குழு – அதிர்ச்சி தமிழ் சினிமா.

நடிகர் அஜித் விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து வலிமை என்ற திரைப்படத்தில்  நடித்து முடித்துள்ளார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சரியான தேதியை குறிப்பிடாமல் செய்யாமல் இருப்பதால் வலிமை படம் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் எப்பொழுது வேண்டுமானாலும் ரிலீஸ் ஆகலாம்.

இதுவரை வலிமை திரைப்படதுடன் எந்த ஒரு படமும் மோதாமல் இருப்பதால்  தற்பொழுது  சோலோவாக ரிலீஸ் ஆக உள்ளதால் அனைத்து திரையரங்குகளிலும் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. ஆனால் வலிமை திரைப்படம் முதல் நாள் மட்டும் மிகப்பெரிய ஒரு தொகையை அள்ளும் என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

அது ஏற்றவாறு வலிமை படக்குழுவும் படத்தை முதல் நாள் மட்டுமே 7,8 காட்சிகளை வெளியிட முனைப்பு காட்டி வருகிறது முன்பெல்லாம் ஒரு டாப் நடிகரின் படம் அதிகாலை 4 மணிக்கு வெளியாகி முதல் நாள் மட்டுமே பதிக காட்சிகளோடு வதோடு மட்டுமல்லாமல் நல்ல வசூல் வேட்டை நடத்தும்.

அஜித்தின் வலிமை படமோ  1 மணிக்கு வெளியிட படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அப்படி வெளியாகும் பட்சத்தில் முதல் நாள் மட்டுமே வலிமை படம் 7,8 காட்சிகள்  வெளியிடப்படும் இதன் மூலம்  மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் மேலும் பல்வேறு டாப் நடிகரின் வசூல் ரெக்கார்டை  முறியடித்து புதிய சாதனை படைக்கும் என வலிமை படக்குழு திட்டம் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித் குமாருடன் கைக்கோர்த்து கார்த்திகேயா, சுமித்திரா, யோகிபாபு, புகழ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் அதில் பிரதான இயக்குனரான யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

Leave a Comment