உலக அளவில் வசூலில் கதகளி ஆடிய வலிமை.! உண்மையை வெளிப்படையாக கூறிய போனி கபூர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் அஜித்குமார் இவரது நடிப்பில் சில மாதங்கள் முன்பு வெளியான திரைப்படம் வலிமை. போனி கபூர் கூட்டணியில் மீண்டும் அஜீத் குமார் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் போனி கபூர்  வலிமை திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். வலிமை திரைப்படம்  உலக அளவில் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக போனி கபூர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சமீபகாலங்களாக வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வசூல் நிலவரங்களை தயாரிப்பாளர்கள் அவரது ரசிகர்களுக்கு அப்டேட் ஆக வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமிபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் வசூலின் தகவல்களையும் அவ்வப்போது தெரிவித்துதான் வருகிறார்கள்.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் 100 கோடி  வரை வசூலித்தது என்று திரைப்படத்தை தயாரித்த லைகா புரோடக்சன் தற்போது அறிவித்துள்ளது.

இனி வரும் நாட்களில் இந்த வசூல் இதைவிட இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் கலெக்ஷனை பொருத்த அளவில் மாஸ் காட்டி வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.

Leave a Comment