ஆத்தாடி வலிமை மோஷன் போஸ்டர் இத்தனை மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து விட்டதா.! இணையத்தில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!

ajith89
ajith89

பல மாதங்களாக தல அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த விஷயம் தான் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனால் கடந்த ஜூன் 11 ஆம் தேதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் படக்குழு கொடுத்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தந்து விட்டார்கள்.

இயக்குனர் எச் வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தை தல அஜித் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் 90% முடிந்த இந்த படப்பிடிப்பு இன்னும் 10 சதவீதம் மட்டும் ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட இருக்கிறது என சமீபத்தில் தகவல் வைரலானதை நாம் பார்த்திருப்போம்.

இந்த திரைப்படம் தல அஜித்தின் திரைப்பயணத்தில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுவிடும் என பல சினிமா பிரபலங்களும் கூறிவருகிறார்கள்.

தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் பல கோடி வசூல் செய்து விட்டது அதனை தொடர்ந்து இந்த திரைப்படமும் இவரது திரைப் பயணத்தில் இவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என பலரும் கூறி வரும் நிலையில் தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை யார் எந்த இயக்குனர் இயக்க போகிறார் என ரசிகர்கள் இப்பொழுதே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது ஆம் யூட்யூபில் இந்த மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் மியூசிக் வகையில் ட்ரெண்டிங் நம்பர் 1 இல் இருப்பதால் அஜித் ரசிகர்கள் இதனை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை நாங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறோம் என கூறி வருகிறார்கள்.