வலிமை படத்தின் கதை ஹச். வினோத்து இல்லை – வெளிவரும் தகவல்.? ஷாக்கான AK ரசிகர்கள்.

சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை கண்டு வரும் அஜித்தின் வலிமை திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். அஜித் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உருவாகி வரும் இந்த வலிமை திரைப்படம்.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது மேலும் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையிலும். இந்த கொரோனா தாக்கத்தினால் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக கடந்த மாதம் 24ம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியாகியது.

மேலும் இந்த படம் வெளியாகி தற்போது வரை திரையரங்கில் ரசிகர் கூட்டம் அலைமோதி வருகின்றன. அந்த வகையில் முதல் நாள் வசூலில் இதுவரை தமிழில் வந்த திரைப்படங்களில் அதிக வசூல் வேட்டை நடத்தி உள்ள படமாக உள்ளது.  பல கோடி வசூலை அள்ளி வரும் இந்த திரைப்படத்தை ஹெட்ச் வினோத் இயக்கியுள்ளார்.

மற்றும் போனி கபூர் இந்த வலிமை திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த வலிமை திரைப்படத்தை தொடர்ந்து இதே கூட்டணி அடுத்த அஜித்தின் 61வது திரைப்படத்திலும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் வலிமை திரைப்படம் குறித்து ஒரு சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் அஜித்திற்கு வலிமை படத்தின் கதையை முதலில் ஹேட்ச் வினோத் கூறவில்லையாம்.  அஜீத் தான் முதலில் ஹெட்ச் வினோத்திற்கு இந்த கதையை கூறி இதை டெவலப் செய்து கொண்டு வாருங்கள் என்று கூறியிருந்தாராம். இதனை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

Leave a Comment