போலீசாரே பாராட்டிய உண்மை கொள்ளை சம்பவம் தான் துணிவு படத்தின் கதையாம்.? வெளிவந்த பரபரப்பு தகவல்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் கடைசியாக வலிமை திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்பொழுது தன்னுடைய 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு துணிவு என பெயர் வைத்துள்ளார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த திரைப்படத்தினை பற்றி அதிர்ச்சியான தகவல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது போலீசாரே பாராட்டிய ஒரு வங்கிக் கொள்ளையின் உண்மை சம்பவத்தின் கதை தான் துணிவு படத்தின் கதை என கூறப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் மூன்றாவது முறையாக ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகம்பூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படத்திற்கு முன்பு மேற்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்கள் இவர்களுடைய கூட்டணி இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது துணிவு படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக தாய்லாந்து நாட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இதனைத் தொடர்ந்து சற்று முன் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர், டைடில் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தற்பொழுது இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்பொழுது இணையதளத்தில் அஜித் தான் அஸ்தமித்து வருகிறார். அஜித் நடித்த படம் துணிவு படத்தின் கதை வங்கிக் கொள்ளையை குறித்து தான் உருவாகி வருகிறது என்பது நாம் அனைவருக்கும் முன்பே தெரியும்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது அதாவது கடந்த 1985ஆம் ஆண்டு 12 முதல் 15 சீக்கியர்கள் காவல்துறை சீருடை அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் வங்கியில் கொள்ளை அடிக்க சென்றனர். அவர்கள் கொள்ளையடித்த மொத்த பணத்தின் மதிப்பு சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்திய வங்கி கொள்ளை வரலாற்றில் இதுதான் மிகப்பெரிய கொள்ளை எனவும் இந்த கொள்ளையை நடத்திய போது வங்கி ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியை கொள்ளை அடித்தவர்கள் என ஒருவர் கூட சிறிய காயம் கூட அடையவில்லை என்றும் அந்த அளவுக்கு பக்காவாக திட்டம் போட்டு இந்த கொள்ளையை நடத்தியார்கள் என போலீசாரே பாராட்டி இருந்தார்கள் இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் வினோத் துணிவு படுத்தினை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment