லீக்கானது “பிச்சைக்காரன் 2” படத்தின் கதை.? புதிய பிரச்சினையை சந்திக்கும் விஜய் ஆண்டனி

வித்தியாசமான படங்களை தொடர்ந்து கொடுத்து வருபவர் விஜய் ஆண்டனி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஒரு சில படங்கள் தோல்வி படங்களாக இருந்தாலும் 2016 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த “பிச்சைக்காரன்” படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது எதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் எடுக்கப்படுவதாக படக்குழுவ அறிவித்தது.

ஒரு வழியாக ஆறு வருடங்களுக்குப் பிறகு படத்தை எடுத்துள்ளது. “தி மேன் வித் டிரான்ஸ்பிளான்ட் பிரைன்” என்ற ஒரு ஹாலிவுட் படத்தின் கதையை தழுவி இருக்கும் என சொல்லப்படுகிறது. வருகின்ற சம்மருக்கு பிச்சைக்காரன் 2 படத்தை ரிலீஸ் செய்ய விஜய் ஆண்டனி மற்றும் படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பிச்சைக்காரன் 2 படக்குழு முதல் நான்கு நிமிட ஸ்னீக் பிக் வீடியோவை வெளியிட்டது.  அதில் ஒருவரின் மூளையை இன்னொருவரின் உடம்பில் வைத்து இயக்குவது போல சொல்லப்பட்டிருந்தது இதை வைத்து பார்க்கும் பொழுதே தெரிகிறது மூளை வைத்து தான் இந்த படம் நகர போகிறது என்று.. இந்த வீடியோவை பார்த்த மக்கள் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து ஒருவர் இந்த ட்ரெய்லரை பார்த்து விட்டு இது என்னுடைய கதை என சொல்லி வருகிறார். இந்த கதையை நான் ஏற்கனவே நடிகர் விஷாலுக்கு சொல்லி இருந்தேன் அவரும் இந்த படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார் என சண்டை போட்டு வருகிறார் இப்பதான் பல பிரச்சனைகளில் இருந்து வெளிவந்த விஜய் ஆண்டனிக்கு..

தற்பொழுது இந்த பிரச்சனை பெரிய இடியாக இறங்கி உள்ளது. இந்த பிரச்சனையையும் தற்பொழுது விஜய் ஆண்டனி சந்தித்து வருகிறார் எது எப்படியோ இந்த கோடை விடுமுறையில் பிச்சைக்காரன் 2 மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நல்ல ஒரு விருந்து கொடுக்க காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment