தமிழ் சினிமாவுலகில் ரஜினிக்கு பிறகு அதிக ஹிட் படங்களை கொடுத்தவர் விஜய். இவர் நடிப்பில் அண்மை காலமாக வெளிவரும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அசால்டாக 200 கோடியை அள்ளிய விடுகிறது. அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார்.
படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் இந்த படமும் நல்ல வசூல் வேட்டை கண்டது தளபதி விஜய்க்கு தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் அவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் தான் தெலுங்கு இயக்குனருடன் கைக்கோர்த்து தனது 66 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல இயக்குனர் நந்தகுமார் அண்மையில் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளார் நான் ஒரு படத்தின் கதையை உருவாக்கி இருந்தேன் அந்த படத்தில் விஜய் நடிக்க வைக்க அதிகம் ஆர்வம் காட்டினேன் ஆனால் அது நடக்க முடியாமல் போனதாக தெரிவித்தார் அது குறித்து மேலும் விலாவாரியாக அவர் சொன்னது நான் ஒரு படத்தின் கதையை உருவாக்கி விஜயின் தந்தை யிடம் சொன்னேன் அவருக்கு ரொம்ப பிடித்துப்போனது.
பின் விஜய்க்கும் இந்த கதை ரொம்ப பிடித்து போனதாக அமைந்தது ஆனால் இந்த படத்தை எடுத்து முடிக்க சில கோடிகள் ஆகும் என்றேன் அதற்கு விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இரண்டு கோடி என்றால் நான் ஒரு தயாரிப்பாளரை காட்டுகிறேன் என கூறினார் ஆனால் அந்த கதையை 3 கோடி வரை செலவாகும் என இயக்குனர் சொன்னார்.
அப்போது பிரமாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து அசத்திய தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அவர்களிடம் இந்த படத்தின் கதையை சொன்னேன் அவருக்கும் ரொம்ப பிடித்துப் போனது பின் யார் ஹீரோ என்றார் நான் விஜய் என்றேன். விஜய் வேண்டாம் எனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் எனவே இந்த கதையை எனது மகனை வைத்து எடுங்கள் என கூறி உள்ளார் அதன்பின் அந்த படம் உருவாக்கப்பட்டது இந்த படத்தில் சிம்ரன் நடித்திருந்தார் அந்த படத்திற்கு கோடீஸ்வரன் என பெயர் வைக்கப்பட்டது.