ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த விடுதலை படத்தின் “ஒன்னோட நடந்தா” பாடல்.! திடீரென டிரெண்டாகும் ரசிகர்களில் விமர்சனம்…

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் தற்போது ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் முதன் முதலாக சூரி அவர்கள் ஹீரோவாக நடிக்கும் திரைப்படமும் இதுதான் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இதுவரைக்கும் காமெடி நடிகராக நம்மை மகிழ்வித்த நடிகர் சூரி தற்போது முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த பெருமை இயக்குனர் வெற்றிமாறன் ஆவர்களை சாரும்.

இதைத் தொடர்ந்து நடிகர் சூரி அவர்கள் அடுத்த திரைப்படத்திலும் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கான பூஜையும் தொடங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சூரி அவர்களின் விடுதலை திரைப்படம் குறித்த அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வைரலானது. இதனை அடுத்து வெளியான விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இசைஞானி இளையராஜா இசையில் தனுஷ் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை மெழுகு போல உருக வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இந்த பாடலைக் கேட்டு பல ரசிகர்கள் விமர்சனம் கொடுத்திருக்கிறார்கள் அந்த விமர்சனம் தற்போது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

மேலும் விடுதலை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பொறுமையாக காத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் விடுதலை திரைப்படம் முடித்தவுடன் அடுத்த திரைப்படத்தில் கமிட்டாகி உள்ள சூரி அவர்கள் தற்போது இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் சூரி அடுத்ததாக கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தத் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment