சப் கலெக்டராக பணியாற்றி வரும் பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்.! வாழ்த்துக்கள் கூறும் பிரபலங்கள்..

பொதுவாக ஏராளமான திரை பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளை சினிமாவில் அறிமுகப்படுத்துவதை தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் தாங்கள் பிரபலமாக இருக்கும்போது தங்களுடைய வாரிசுகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி அவர்களை ஒரு நல்ல நிலைமைக்கு வர வைத்து விடுவடலாம் என அனைத்து பிரபலங்களும் விரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகரின் மகன் சப் கலெக்டர் ஆகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது அதாவது தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் சின்னி ஜெயந்த். இவர் ரஜினி, கமல் என ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவருடைய மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார் அதன் பிறகு டெல்லியில் நடந்த பயிற்சியில் கலந்து கொண்டார் பயிற்சி முடிந்த பிறகு நாராயணன் மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி பயிற்சி துணை அதிகாரியாக இருக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது இவர் திருப்பூர் சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

chinni jeyanth
chinni jeyanth

அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 75 ஆவது ராங் பெற்ற இவர் திருப்பூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

இவ்வாறு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் அவர்களின் மகன் இவ்வாறு சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது மேலும் இவரை தொடர்ந்த பாராட்டியும் அறிகிறார்கள்.

Leave a Comment