நடிகர் விமலுக்கு வந்த நிலைமை மட்டும் எந்த நடிகருக்கும் வரக்கூடாது.! அவரது நிலைமையை யோசித்துப் பார்த்தாலே தூக்கம் கூட வராது என கூறும் ரசிகர்கள்.

0

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவுலகில் சக நடிகர்களை தொடர்ந்து நானும் ஒரு நடிகர் என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் விமல் இவர் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட நடிகராக வலம் வந்தார் இவர் அப்பொழுது நடித்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் பலரும் இவரை வைத்து திரைப்படங்களை எடுக்க ஆர்வமாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு மிகவும் பிடித்த கதைகளாக தேர்ந்தெடுத்து விமல் நடித்து வந்தார் ஆம் இவர் நடிப்பில் வெளியான களவாணி,கேடி பில்லா கில்லாடி ரங்கா,மஞ்சப்பை, மாப்பிள்ளை சிங்கம் போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு வசூல் செய்திருந்தது அதிலும் குறிப்பாக களவாணி 2 திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று விட்டது என்று தான் கூற வேண்டும்.

நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விமல் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் தவித்து வந்தார் அதற்கு முக்கிய காரணம் அவரும் கூடிய சீக்கிரம் பெரிய நடிகராக வளம் வர வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற நடிகைகளைப் போல் பல திரைப்படங்களில் உடனுக்குடனே நடித்து வந்தார் இதனால் இவருக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது.

இருப்பினும் விமல் தனது விடா முயற்சியினால் தனது சொந்த தயாரிப்பில் மன்னர்வகையரா என்ற படத்தை எடுத்துள்ளார் ஆனால் இவர் எதிர்பார்த்த வெற்றியை அந்த திரைப்படம் தரவில்லை இருப்பினும் இவருக்கு பெரிய கடன் வந்துவிட்டது கடனை கேட்பவர்களிடம் இவர் கொஞ்சம் கலாட்டா செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது ஆனால் தற்பொழுது விமலை வைத்து பல தயாரிப்பு நிறுவனமும் படத்தை எடுக்க கொஞ்சம் யோசிக்கிறது.

vimal2
vimal2

குறிப்பாக விமலின் படங்களை எடுத்தால் கண்டிப்பாக சிக்கல் வரும் என நினைத்து தயாரிப்பு நிறுவனங்களும் தயங்குவதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஆனாலும் விமல் தனக்கு தெரிந்த நண்பர்கள் தயாரிக்கும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.