Vijay Tv Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் சமீப காலங்களாக குடும்பத்தினர்களுடன் நாள்தோறும் பார்க்கக்கூடிய சீரியலாக எதிர்நீச்சல் இருந்து வருகிறது. அப்படி சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் தொடர்ந்து பல மடங்கு அதிகரித்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலை விஜய் டிவியின் சீரியல் பின்னுக்கு தள்ளி தள்ளி உள்ளது. அதாவது, பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டாலும் இருவரும் தங்களை அறியாமலேயே காதலித்து வருகின்றனர். அதேபோல் டாம் அண்ட் ஜெர்ரி போல் சண்டை போட்டு வரும் நிலையில் இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் முத்துவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்திருக்கும் நிலையில் சின்னத்திரையின் விஜய் சேதுபதி ஆக பார்க்கப்படுகிறது. இவருடைய நடிப்பு மற்றும் ஸ்டைல் போன்றவை விஜய் சேதுபதியை போலவே இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி தற்பொழுது முத்து மற்றும் மீனா ரோமியோ ஜூலியோ போல் காதலித்து ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரையிலும் சண்டை மட்டுமே போட்டு வந்த இவர்களின் ஒற்றுமையை தற்போது பார்க்கும் பொழுது புல்லரிக்க வைக்கிறது. ஆனால் இதற்கு சதி செய்யும் வகையில் ஆடி மாதத்தை காரணமாக வைத்து மீனாவை அவருடைய அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
எனவே கிளம்பும்பொழுது முத்து, மீனா இருவரும் தங்களுடைய கண்களினாலே பேசிக்கொண்டு பாசத்தை பரிமாறிக் கொள்கின்றனர். முத்து வீட்டிற்கு வந்தவுடன் மீனாவின் ஞாபகம் அதிகமாக வர மீனாவிற்கு ஃபோன் பண்ணி நான் வீட்டிற்கு வருகிறேன் என கூறுகிறார்.
மீனாவும் தன்னுடைய கணவருக்காக தடபுடலாக சமைத்துக் கொண்டிருக்கிறார் சாப்பிட்டுவிட்டு அங்கேயே ரெஸ்ட் எடுக்க மாப்பிள்ளை இங்கேயே தூங்கி விடுவாரோ என மீனாவின் அம்மா பயப்படுகிறார். இவ்வாறு சுவாரசியமான எபிசோடுகளுடன் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் ரோகிணியின் சுயரூபம் விரைவில் விஜயாவுக்கு தெரிய வர ஒரு வழியாக போகிறார்.