ஜீ தமிழ் ‘சரி கம பா’ நிகழ்ச்சியின் பாடகர் மரணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தமிழ் சின்னத்திரையில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி இந்த மூன்று தொலைக்காட்சிகளுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புகள் கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து இந்த தொலைக்காட்சிகள் டிஆர்பி-யில்முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக சுவாரசியமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வரும் நிலையில் தற்போது இந்த சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான பாடகர் மரணம் அடைந்திருக்கும் நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல வருடங்களாக சரிகமப நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் மூலம் பாடம் திறமை இருந்தும் பிரபலம் அடைய முடியாமல் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இந்நிகழ்ச்சி விளங்கி வரும் நிலையில் இதன் மூலம் பட்டிக்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் ரமணியம்மாள். வயதானாலும் கூட இவருடைய பாடல் அனைவரையும் கவர்ந்த நிலையில் ராக்ஸ்டார் ரமணியம்மாள் என பெயர் வைக்கப்பட்டது.

ramaniammal
ramaniammal

எனவே இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் உருவானார்கள் மேலும் குறிப்பாக நாட்டுப்புறப் பாடல் பலருடைய நெஞ்சையும் கவர்ந்த நிலையில் பிறகு திரைப்படங்களிலும் பாடத் தொடங்கினார். அந்த வகையில் தமிழில் வெளிவந்த காத்தவராயன் படத்தின் மூலம் பின்னணி பாடகையாக அறிமுகமான இவர் அதன் பிறகு ஹரிதாஸ், ஜுங்கா, சண்டைக்கோழி 2, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா மற்றும் காப்பான் ஆகிய படங்களில் பாடல்கள் பாடி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தன்னுடைய இளம் வயதில் பார்க்க முடியாத பல விஷயங்களை வயதான காலத்தில் செய்தார் அந்த வகையில் விமானத்தில் கூட பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வயதான காரணத்தினால் பாடகி ரமணியம்மாள் இன்று மரணம் அடைந்துள்ளார் எனவே இவருடைய மரணத்திற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment