பிக்பாஸ் சீசன் 5 – ல் களம் இறங்க போகும் வெள்ளித்திரை பிரபலம்.! அந்த நடிகை யார் தெரியுமா.?

சின்னத்திரையில் பல்வேறு புதுப்புது நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர். அந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில் இருந்து வந்தவர்கள்.சிலர் முகம் நமக்கு பரிட்சயமான முகம் சில முகங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் நமக்கு தெரியும் . நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

நேற்று வாரத்தின் இறுதி நாட்கள் என்பதால் கமலஹாசன் இடம்பெற்றுள்ள எபிசோடுகள் நடைபெற்றன.இதுவரை வீட்டில் நடந்த சின்ன சின்ன பிரச்சனைகள் குறித்து பேசினார் .பிக் பாஸ் வீட்டில் 15 நபர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். அதில் ஒருவரான நாடியாக முதல் போட்டியாளராக குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இன்று காலை வந்த முதல் ப்ரோமோவில் நாமினேஷன்கள் நடைபெற்றன. அடுத்து வரவிருக்கும் ப்ரோமோவில் யார் யாரெல்லாம் எலிமினேஷனுக்கு தேர்வு ஆகி உள்ளார்கள் என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

priya bhavani shankar
priya bhavani shankar

பிக் பாஸ் 5 குறித்து தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால் பிரியா பவானி சங்கர் அவர் நடித்துள்ள ஓ மன பெண்ணே படத்தின் ப்ரோமோஷனுக்காக பிக்பாஸ் சீசன் 5 வீட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின மற்றும் அவருடன் யார் யாரெல்லாம் சேர்ந்து வருவார்கள் என்ற தகவல் இன்னும் சரியாக வெளிவரவில்லை. இருப்பினும் ஹரிஷ் கல்யாண் இதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment