“பீஸ்ட்” படத்தின் ஷூட்டிங் ராஷ்யாவில் நடைபெறவில்லை – இங்க தான் நடக்குது.? வேற எங்க எல்லாம் நடக்க போகுது தெரியுமா.?

தளபதி விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பீஸ்ட் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக தொடங்கப்பட்டு வருகிறது முதலில் ஜார்ஜியாவில் ஏற்கனவே முதல் கட்ட ஷூட்டிங் முடிந்தது அதன் பிறகு தற்போது சென்னையில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வந்தது. இதற்கு இடையில்  தான் ப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு கொண்டாடினர்.

இதை அடுத்து ரஷ்யா செல்லும் என படக்குழு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஒரு புதிய ட்விட் வைத்துள்ளது அதாவது பீஸ்ட் படக்குழு தற்போது சென்னையில் தான் சூட்டிங் எடுத்து வருகிறது இந்த சூட்டிங் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது அது முடிந்த பிறகுதான் மற்ற ஷூட்டிங் வேலைகள் ஆரம்பிக்கும் என தெரியவந்துள்ளது.

தற்பொழுது ஹீரோயின் பூஜா ஹெக்டே மற்றும் மலையாள சினிமா நடிகை அபர்ணா தாஸ் ஆகியோர் இணையும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன அது முடிந்த பிறகுதான் ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிய வருகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை தெரியவில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் தான் வில்லன்களை சரியாக தேர்வு செய்கிறார்  இயக்குனர் நெல்சன் திலீப்குமார். ரசிகர்களும் இன்னும் எத்தனை வில்லன்கள் தான் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் என கேட்டு வருகின்றனர்.

Leave a Comment