வந்த கொஞ்ச நாளிலேயே டாப் சீரியல்களை அடித்து நொறுக்கி TRP – யில் மாஸ் காட்டும் புதிய சீரியல்.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

சமீபகாலமாக திரைப்படங்களைக் காட்டிலும் மக்கள் மற்றும் இல்லத்தரசிகள், காதல் ஜோடிகள்  போன்ற பலரும் சின்னத்திரை சீரியல்களையே விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் புதுப்புதுக் கதைகளுடன் பல சிறப்பான சீரியல்களை நடத்தி வருகின்றன.

அதிலும் குறிப்பாக சன் டிவியில் ரோஜா, சுந்தரி, வானத்தைப்போல போன்ற சூப்பர் ஹிட் சீரியல்கள் டி ஆர் பியில் முன்னிலையில் வகித்து வந்தன.  இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியவர்களின் நடிப்பில் “கயல்” என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி. இவர் இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். மேலும் சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் சைத்ரா ரெட்டி.

ரசிகர்களை கவரும் வகையில் பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். இதனால் சமூக வலைத்தளங்களில் இவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் ஏராளம்.  இந்த நிலையில் தற்போது இவர் கயல் சீரியலில் நடித்து வருவது மக்கள் பலரையும்  மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் கயல் சீரியல் தொடங்கப்பட்ட சில மாதங்களிலே டி ஆர் பி யில்  தொடர்ந்து முன்னிலையிலேயே உள்ளது. மேலும் தமிழ்நாட்டு சீரியல்களில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து முதல் இடத்திலே  உள்ளது.  அதனால் சீரியல் குழுவினர்கள்  ஒன்று சேர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version