பழம் பழுத்தா கடை தெருவுக்கு வந்து தான் ஆகணும்.! OTT யில் வெளியாகும் வாரிசு.? எப்பொழுது தெரியுமா…

0
varsiu
varsiu

தளபதி விஜய் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள் இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

வம்சி இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படத்தை தில்ராஜ் என்பவர் தயாரித்திருந்தார் படத்திற்கு தமன் தான் இசையமைத்திருந்தார். குடும்ப செண்டிமெண்ட் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் வசூலில் நாலு நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனைப்படைத்தும் வருகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த திரைப்படத்துடன் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகலுக்கு இரண்டு மடங்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. பொங்கல் தினத்தில் இப்படி இரண்டு மிகப்பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ott ரிலீஸ் எப்பொழுது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் எந்த ott நிறுவனம் வாரிசு திரைப்படத்தை வாங்கியுள்ளது என தெரிந்து கொள்ளவும் ஆவலோடு இருக்கிறார்கள். வாரிசு திரைப்படத்தின் ott உரிமையை netflix நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பொங்கல் தின விடுமுறை நாள் என்பதால் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு இன்னும் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் 30 நாட்கள் முடிந்த பிறகு ott யில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் ott ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.