பிக் பாஸ் 5 சீசனை எதிர்நோக்கி காத்து கிடக்கும் செம்பருத்தி சீரியல் பிரபலமா.? இவரு இருந்த வீட்டில் செம்ம சண்டை இருக்கும்.? யார் அது தெரியுமா.?

0

உலகநாயகன் கமலஹாசன் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை  சீசன்கள் சிறப்பாக நடத்தி  வருகிறார் நான்கு சீசன்கள் முடிந்த நிலையில் ஐந்தாவது சீசனையும் சிறப்பாக தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர் அதற்கான ப்ரோமோ மற்றும் லோகோ ஆகியவை வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்திய நிலையில் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பதே மக்களின் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் அக்டோபர் இறுதி வாரத்தில் நிகழ்ச்சியை தொடங்க இருக்கும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்க படுகிறார்கள் என்பது சரியாக தெரிவில்லை இருந்தாலும் அவ்வபோது ஒரு மிகப்பெரிய லிஸ்ட் அதில் பலரின் பெயர் வெளிவந்திருந்தாலும் அதிகாரப்பூர்வமாக இன்று வரையிலும் யாரையும் சொல்ல முடியவில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சில பிரபலங்களை மட்டும் மக்கள் அடித்து சொல்கின்றனர் இவர்கள் நிச்சயம் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று அதுபோல கடந்த வாரம் சில பிக் பாஸ் போட்டியாளர்களாக விளையாட போகிறார்கள் என சில பெயர்களின் லிஸ்ட் வெளியாகியது அதில் செம்பருத்தி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வரும் பிரியாராமன் பெயரும் இடம் பெற்று இருந்தது.

priya-raman
priya-raman

இந்த நிலையில் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என்ற தகவலையும் சமூக வலைதள பக்கத்தில் தீயாய் பரவியது. இதனால் அவர் நிச்சயம் பிக் பாஸ் இந்த சீசனில் விளையாட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இச்செய்தி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை அந்த பிரபலமும் நான் பிக்பாஸ் வீட்டில் விளையாட இருக்கிறேன் என்றும் எதையும் அவர் சொல்லவும் இல்லை இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.