வலிமை படத்திலிருந்து வெளியாகும் இரண்டாவது பாடல் – எப்போ தெரியுமா.? எந்த மாதிரியான பாடல் தெரியுமா.?

இளம் இயக்குனர்கள் நல்ல படங்களை ஆரம்பத்திலேயே கொடுத்து மகளையும், ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கின்றனர். ஒரு கட்டத்தில் டாப் நடிகர் படங்களை கைப்பற்றி விடுகின்றனர் அந்த வகையில் ஹச் .

வினோத் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் குறைந்த திரைப்படங்கள் எடுத்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. அந்த காரணத்தினால் தற்போது அஜித்தை வைத்து படம் இயக்கும் அளவிற்கு அவர் முன்னேறி உள்ளார்.

எச். வினோத் அஜித்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து “வலிமை” என்ற படத்தை எடுத்து முடித்து உள்ளார். படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகிறது அதற்கு முன்பாக அப்டேட்களை படக்குழு ஒரு பக்கம் கொடுத்திருக்கிறது.  மறுபக்கம் போஸ்ட் புரமோஷன் வேலைகளில் மிக தீவிரமாக செய்து வருகிறது.

வலிமை படம் தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக இருப்பதால் இந்த படத்திற்கான வேலைகள் அதிகம் ஆகி கொண்டே போகின்றன. இதற்கிடையில் ரசிகர்கள் வலிமை படத்திலிருந்து இரண்டாவது பாடல் அல்லது ட்ரெய்லரை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என கேட்டு வருகின்றனர்.

இதனால் படக்குழு தீவிரமாக தனது வேலையை செய்து வருகிறது இருப்பினும் முதலாவதாக வலிமை படத்திலிருந்து இரண்டாவது பாடலை வெளியிட்டு விடலாம் என முடிவு எடுத்துள்ளதாக அதன்படி பார்க்கையில் இந்த வாரம் வலிமை திரைப்படத்திலிருந்து 2வது சிங்கிள் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பாடல் அம்மா செண்டிமெண்ட் பாடல் என்றும் அதனை சித் ஸ்ரீராம் என்பவர் பாடி உள்ளதாக தகவல்கள் பரவிய வண்ணமே இருக்கின்றன.

Leave a Comment