வசூலில் பாகுபலி திரைப்படத்தை அடித்து நொறுக்கிய கேஜிஎஃப் இரண்டாவது பாகம்.! ராக்கி பாய் நான் சும்மாவா.!

0
kgf 2 movie collection
kgf 2 movie collection

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகிய திரைப்படம்தான் கேஜிஎப், இந்த  திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படக்குழு இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்தார்கள் இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாகியது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகி கேஜிஎப் திரைப்படம் இதுவரை 700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் முதலில் 250 திரையரங்குகள் மட்டும்தான் கேஜிஎஃப் திரைப்படத்திற்கு கிடைத்தது.

ஏனென்றால் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிய திரைப்படம் 800 திரையரங்குகளில் வெளியானது அதனால் கேஜிஎப் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்ததால் பல திரையரங்குகளில் கேஜிஎப் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கேஜிஎப் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இதற்கு முன் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகிய பாகுபலி திரைப்படம் 650 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்தது ஆனால் தற்பொழுது இந்த வசூல் சாதனையை யாஷ் நடிப்பில் வெளியாகி கேஜிஎஃப் இரண்டாவது பாகம் முறியடித்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் வெறும் ஏழே நாட்களில் பாகுபலி திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அடுத்ததாக தங்கள் திரைப் படத்தின் சாதனையை முறியடிக்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இன்னும் பல திரையரங்குகளில் கேஜிஎப் திரைப்படம் ஹவுஸ்ஃபுல் என்ற நிலைமை நீடித்து வருவதாக பலரும் கூறி வருகிறார்கள்.