செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.! எந்த படத்தின் இரண்டாவது பாகம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன் இவர் பல திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இயக்குனர் செல்வராகவன் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படங்களை இயக்கி வருகிறார்.

அப்படி ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு தன்னுடைய படங்களை இயக்கி வருகிறார் அப்படி இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் தான் துள்ளுவதோ இளமை திரைப்படம்படம் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கிய செல்வராகவன் பல வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார்.

அதையும் தாண்டி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆகிய படங்களை கொடுத்துள்ளார். இப்படி பல திரைப்படங்களை எதார்த்தமாக கொடுத்து வந்த இயக்குனர் செல்வராகவன் ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடிக்கும் அளவிற்கு படங்களை இயக்கியுள்ளார். அப்படி இவர் ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடித்த படங்கள் என்னவென்றால் காதல் கொண்டேன், இரண்டாம் உலகம், 7 ஜி ரெயின்போ காலனி, ஆகிய படங்களை கூறலாம்.

அதிலும் குறிப்பாக 2004 ஆம் ஆண்டு வெளியாகிய சூப்பர் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண காதல் கதையை வைத்து ரசிகர்களின் மனதை உருகும் அளவிற்கு படத்தை உருவாக்கியுள்ளார் செல்வராகவன்.

இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்திய 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்தினம் கூறியுள்ளார்.

மேலும் 7ஜி ரெண்போ காலனி படத்தின் இரண்டாவது பாகம் குறித்து இயக்குனர் செல்வராஜ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகத்தில் ரவி கிருஷ்ணா தான் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment