“தலைவி” இரண்டாம் பாகம் உருவாக போகுது.? படத்தில் பணியாற்றிய பிரபல எழுத்தாளர் அதிரடி.

0

உலகில் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தாலும் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்து கொண்டு வலம் வருபவர் தான் ஏ எல் விஜய். இவர் இயக்கத்தில் இதுவரை தெய்வத்திருமகள், தலைவா, தாண்டவம், சைவம், தேவி போன்ற பல்வேறு சிறப்பான படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

வெள்ளித்திரையில் வெற்றிகண்டாலும் சமீபகாலமாக நிஜ வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்து தற்பொழுது படங்கள் எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் முதலாவதாக மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து அசத்தினார்.

இந்த படத்திற்கு ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்து அசத்தினார் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு தலைவி என பெயரை வைத்தது படக்குழு. படத்தின் டிரைலர் மற்றும் டீசர் ஆகியவை வெளிவந்து மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது ஒருகட்டத்தில் படம் வெளியாகி நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் சொல்லிக்கொள்ளும்படி வசூல் வேட்டை நடத்த முடியாமல் போனது.

இருப்பினும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது தொடர்ந்து இதன் அடுத்த பாகம் வெளிவர இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் படத்தின் எழுத்தாளர் ரஜத் அரோரா என்பவர் பேட்டி ஒன்றில் தேவி படம் குறித்து பேசினார் மேலும் தலைவி இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் அதற்கு காரணம் முதல் பாகத்தில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதோடு படம் முடிந்திருக்கும்.

அதன்பிறகு ஜெயலலிதா முதல்வராக என்ன செய்தார் எப்படி எல்லாம் போனது என்பதை இரண்டாம் பாகத்தில் காட்ட வேண்டிய சூழல் இருப்பதால் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார். அரசியல் பக்கத்தில் இருந்து அவ்வப்போது சில பிரச்சனைகள் வந்து கொண்டே இருப்பதால் இரண்டாம் பாகத்தை எடுப்பார்களா எடுக்க மாட்டார்களா என்பது தெரியாமல் இருந்து வருகிறது