நானும் ரவுடிதான் என பையில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து தலைமை ஆசிரியரை தாக்க முயன்ற +2 மாணவன்.! வைரலாகும் வீடியோ

0

பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தலையில் உள்ள முடியை ஒழுங்காக வெட்டாமல் பின்னாடி பங்க போல் வைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார் அதனை தட்டிக் கேட்பதற்காக அந்த மாணவனை தலைமை ஆசிரியர் தனியாக அழைத்து இது போல் பள்ளிக்கு வரக்கூடாது மற்ற மாணவர்கள் கெட்டு விடுவார்கள் என அறிவுரை கூறியுள்ளார்கள் இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் தலைமை ஆசிரியரை தாக்க முயன்றுள்ளார் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் படித்து வந்துள்ளார் கடந்த 26ஆம் தேதி அந்த மாணவன் தலைமுடி ஒழுங்காக வெட்டாமல் இருந்ததைப் பார்த்த தலைமை ஆசிரியர் தன்னுடைய அறைக்கு அழைத்து இதுபோல் பள்ளிக்கு வரக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால் அந்த மாணவன் தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதுமட்டுமில்லாமல் நாற்காலி மீது இருந்த பொருட்களை கீழே தள்ளி விட்டுள்ளார் அங்கு பெரும் சப்தம் ஏற்பட்டதால் சக ஆசிரியர்கள் அறைக்கு வந்து மாணவனை சமாதானப்படுத்தினார்கள். இந்த தகவலை அறிந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தையை நடத்தினார்கள்.

நடந்த சம்பவத்தை தலைமை ஆசிரியர் கழக நிர்வாகிகள் அவர்களிடம் தெரிவித்தார் அப்பொழுது மிகவும் ஆத்திரம் அடைந்த மாணவன் தன்னுடைய கையிலிருந்த காலி பீர் பாட்டிலை எடுத்து உடைத்தது டன் தலைமை ஆசிரியை தாக்க முயன்றார் அப்பொழுது சக ஆசிரியர்கள் மாணவனை தடுத்து நிறுத்தியுள்ளார்கள் இந்த தகவலை அறிந்த ஆத்தூர் போலீசார் உடனடியாக அரசு பள்ளிக்கு விரைந்து சென்றார்கள்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டார்கள் மாணவன் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கழக நிர்வாகிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள் அப்போது மாணவன் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தால் பின்னர் மாணவனை அழைத்து அறிவுரை வழங்கி வகுப்பிற்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும் மாணவனிடம் போலீசார் விசாரிக்கும் காட்சியும் மாணவன் அவசரமாக தலைமை ஆசிரியை தாக்க முயன்றது பொருள்களை உடைத்தது நானும் ரவுடிதான் எனக்கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் மிகவேகமாக வைரளாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தலைமையாசிரியர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து ஆத்தூர் நகர போலீசார் மாணவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில்  அடைப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.