20 நிமிட மாஸ் காட்சியில் நடித்ததற்காக மட்டுமே பல கோடிகளை சம்பளமாக வாங்கிய “RRR” நடிகர்.! வாயை பிளக்கும் ரசிகர்கள்.

தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட பட்ஜெட் படங்களை நல்ல தரத்தில் எடுத்து கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருபவர் ராஜமவுலி.  படத்தின் பட்ஜெட்டை  தாண்டி இவர் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துவதால் இந்திய அளவில் கவனிக்கப்பட கூடிய இயக்குனர்களில் ஒருவராக விஸ்வரூபம் எடுத்து உள்ளார் இயக்குனர் ராஜமௌலி.

இதுவரை  பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர்களை வைத்து RRR என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்து முடித்துள்ளார் இந்த படத்தில் இருந்து இதுவரை பல்வேறு பாடல்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்ரைலர்  ஆகிய அனைத்துமே..

வெளிவந்து மிரட்டும் வகையில் இருந்ததால் எதிர்பார்ப்பு உச்சத்திலிருந்த ஆனால் தற்போது நிலவும் சூழல் சரியில்லாத காரணத்தினால் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் முடியாமல் போனது. எப்பொழுது வெளியிடுவோம் என அடுத்த தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் அவர்களுடன் இணைந்து அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

அதன்படி பார்க்கையில் முதன்மை வேடத்தில் நடிக்கும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகிய இருவருமே சுமார் 50 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது நடிகை ஆலியா பட் 15  சில காட்சிகளுக்கு மட்டுமே சுமார் 9 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் இந்த திரைப்படத்தில் வெறும் 20 நிமிடம் நடித்துள்ளார் அதற்காக மட்டுமே சுமார் 35 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment