இணையத்தில் தீயாய் பரவும் ரோலெக்ஸ்-லியோ போஸ்ட்டர்.! இது உண்மையா இருந்தா தரமா இருக்கும்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் டைட்டில் ப்ரம்மோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைகிறதா இல்லையா என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து லியோ படத்தின் டைட்டில் பிரம்மோவை பார்த்த பலர் லியோ படம் எல்சியு-வில் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவலாக இருக்கிறது என்று கூறி வந்தனர். இந்த நிலையில் ஆக்ரோஷமாக லியோ மற்றும் ரோலக்ஸ் இருவரும் காரில் பறந்து கொண்டிருக்கும் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக கடைசி ஐந்து நிமிடத்தில் களம் இறங்கி தியேட்டரையே தெறிக்கவிட்டார் ரோலக்ஸ் சூர்யா. இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் ரோலக்ஸ் சூர்யா அவர்கள் இடம் பெறுவார் என்று சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதுமட்டுமல்லாமல் லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோவில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் விதமாக ஸ்கார்பியன் டாட்டூ இடம்பெற்று இருந்தது இதுவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் ரோலக்ஸ் சூர்யாவும் லியோ விஜயும் ஒரே காரில் அனல் பறக்க செல்லும் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இது உண்மையாக இருந்தால் தரமாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

rolex-leo
rolex-leo

Leave a Comment