லியோ படத்தில் மிரட்ட பயங்கரமாக ஒர்க் அவுட் செய்யும் “முரட்டு வில்லன்”.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்.

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய் இவர் தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக வாரிசு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இளம் இயக்குனர்..

லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து லியோ படத்தில் விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். விஜய் இதுவரை எடுத்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய ஆக்சன் படங்களாக இருந்து வந்துள்ளதால் லியோ படமும் அப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதற்கு ஏற்றார் போல லியோ படத்தில் விஜயுடன் கைகோர்த்து அர்ஜுன், சஞ்சய்தத்..

மிஷ்கின், மன்சூர் அலி கான், கௌதம் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த் என மிகப் பெரிய திரை பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக முடிந்தது அதனைத் தொடர்ந்து படக்குழு தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்று இரண்டாவது கட்ட படப்பிடிப்பை கடும் குளிர் என்று பார்க்காமல் விறுவிறுப்பாக எடுத்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து படகுழு புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டு வருகிறது இதனால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தரமான தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது லியோ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் நடிக்கிறார் என ஏற்கனவே சொல்லப்பட்டது.

தற்போது அந்த படத்திற்காக தாறுமாறாக சஞ்சய் தத் உடற்பயிற்சி செய்து உடம்பை முறுக்கேற்றி வருகிறார் இதை பார்த்த ரசிகர்கள் விஜய் புரட்டி எடுக்க இப்படியா வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்வது எனக் கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர். இதோ லியோ படத்திற்காக தாறுமாறாக ஒர்க்அவுட் செய்யும் சஞ்சய் தத்..

sanjay dutt
sanjay dutt

Leave a Comment