சிம்புவின் எழுச்சி.. இந்த முன்னணி ஹீரோவுக்கு பாதிப்பை கொடுக்குமா.? கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சி.

simbu-and-sivakarthikeyan
simbu-and-sivakarthikeyan-

லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் எஸ்டிஆர் என்கின்ற சிம்பு சமீபகாலமாக தனது எண்ணங்களை முற்றிலுமாக மாற்றி கொண்டு தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து இவர் மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து நடித்து வருகிறார்.

முதலில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியாகி கோலாகலமாக வெற்றி கண்டு வரும் திரைப்படம் மாநாடு இந்த திரைப்படம் சிம்பு கேரியரில் ஒரு புதிய வளர்ச்சியை கொடுத்து உள்ளது. முதல் நாள் மட்டுமே மாநாடு திரைப்படம் நல்ல வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இன்னும் இருக்கின்ற நாட்களில் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தி மீண்டும் தனது திறமையை வெளிகாட்ட ரெடியாக இருக்கிறார்.இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தால் அவர் தொடமுடியாத உச்சத்தை எட்டுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்போது வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு மிகப்பெரிய ஒரு குடைச்சல் கொடுக்கும் என தெரிய வருகிறது. சிம்பு பழைய இடத்தை பிடித்து விட்டால் பெரும்பாலான இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பட வாய்ப்பை அள்ளி கொடுக்க ரெடி ஆகிவிடுவார்கள் இதனால் வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு படம் கிடைக்காமல் போனாலும் போகும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அமோகமாக இருக்கிறது சிம்பு அவருக்கு குடைச்சல் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவர் அஜித், விஜய் அளவுக்கு தாறுமாறாக  உயர்ந்து விட்டார். அதனால் சிம்புவின் அமோக வளர்ச்சி கூட சிவகார்த்திகேயனை பாதிக்காது என கூறுகின்றனர்.